எச்சரிக்கை மக்களே! இந்த அறிகுறி எல்லாம் இருந்தா ரத்தத்தில் ஆக்சிஜன் இல்லைனு அர்த்தமாம்!

4 days ago 1
signs and symptoms of hypoxemia in tamil

நாம் சுவாசிப்பது என்பது ஒரு இயற்கையான செயல்முறை. நாம் பிறந்தது முதல் இறக்கும் கடைசி நொடி வரை நம் இதயம் மற்றும் உடல் சீராக இயங்க சுவாசிப்பது மிக மிக அவசியம். இப்படி நாம் சுவாசிக்கும் போது உள்ளிழுக்கும் ஆக்சிஜன் நம் ரத்தத்தில் கலந்து உடலில் உள்ள முக்கிய உறுப்புகள், செல்கள் மற்றும் திசுக்கள் அனைத்தும் சீராக செயல்பட உதவுகிறது. நம் இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் அளவு இல்லாமல் போகும் நிலைமை, ​​அது ஹைபோக்ஸீமியா (hypoxemia) என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஹைபோக்ஸீமியா குறைபாடு ஏற்படும்போது கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்த hypoxemia நிலைமை ஏற்படும் போது செயற்கையாக தான் நாம் மருத்துவ ஆக்சிஜனை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.  ஆனால் இது போன்று இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது சில நொடிகளில் ஏற்படும் விஷயமல்ல, ஆக்சிஜன் அளவு குறையும்போது நம் உடல் சில அறிகுறிகளின் மூலம் நமக்கு அதை தெரியப்படுத்தும். அது என்ன அறிகுறிகள் என்பதை இப்போது தெரிந்துக்கொள்ளலாம்.

பலவீனமாக உணர்தல் அல்லது தலைச்சுற்றல்

 • இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது அதை நமக்கு முதலில் தெரியப்படுத்தும் பொதுவான அறிகுறி தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி. 
 • நீங்கள் எப்போதாவது இப்படி உணர்ந்து இருக்கிறீர்களா? ஆம் எனில், அது உடனே இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று பயப்பட வேண்டும். 
 • உட்கார்ந்து வேகமாக எழுந்தவுடன் கூட பெரும்பாலான மக்களுக்கு தலைச்சுற்றல் ஏற்படுவது போல இருக்கும். அதெல்லாம் நாம் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று சொல்லிவிடக்கூடாது.
 • ஒருவருக்கு இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லையென்றால், ஒரு சிறிய வேலையைச் செய்தாலுமே இதுபோன்ற பிரச்சினையை அனுபவிப்பார்கள். எல்லோருக்கும் இப்படி ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது.

சோர்வாகவே உணர்தல்

 • தினமும் சோர்வாகவும் களைப்பாகவும் உணர்தல் என்பது உடலில் இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லை என்பதற்கான குறிப்பிடத்தக்க அறிகுறியாகும். 
 • ஒரு நபர் சோர்வடைய பல வகையான காரணங்கள் இருக்கலாம். 
 • ஆனால் ஹைபோக்ஸீமியா போன்ற பிரச்சினை இருக்கும்போது இந்த சோர்வு மற்றும் களைப்பு என்பது நாள்பட்டதாக நீடிக்கும். ஒரு நபர் வழக்கத்தை விட சீக்கிரமே சோர்வடைந்தால், இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

பதற்றம் &  இதய துடிப்பு அதிகரித்தல்

 • ஒருவரின் இதயம் வேகமாக துடிக்கும் போது தான் பதற்றம் உண்டாகும். உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்கும் இதயம் கடுமையாக உழைக்கும்போது வேகமாக துடிக்கிறது. 
 • ஆனால், வேலை ஏதும் செய்யாத போதும்  உடலில் போதுமான ஆக்சிஜன் இல்லாவிட்டால், இதய துடிப்பு திடீரென அதிகமாகி பதற்றமாக உணரக்கூடும்.

மூச்சு திணறல்

 • உடலில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாதபோது சுவாசிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். 
 • ஆக்ஸிஜனை உள்ளிழுக்கவும் கூட சிரமமான நிலை ஏற்படலாம், ​​அது போன்ற  கடுமையான பிரச்சினை இருந்தால் உங்கள் இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லை என்பதை புரிந்துக்கொண்டு உடனடி மருத்துவ உதவியைப் பெற வேண்டும். 

தலைவலி மற்றும் குழப்பம்

 • தலைவலி என்றாலே ​​இரத்தத்தில் ஆக்ஸிஜன் இல்லை என்று அர்த்தமல்ல. 
 • ஆனால் ஒரு தலைவலி, குழப்பம், தலைச்சுற்றல் மற்றும் சுயநினைவிழத்தல் போன்ற சிக்கல் எல்லாம் ஒருங்கே ஏற்பட்டால் உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். 
 • எனவே இது போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், உடலில் ஆக்ஸிஜன் குறைவாக உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
Read Entire Article