தடுப்பூசி தொழில் நுட்பங்களை உலக நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

4 days ago 1
தடுப்பூசி தொழில் நுட்பங்களை உலக நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்  என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார். ஆசிய வளர்ச்சி வங்கியின் கருத்தரங்கு ஒன்றில் காணொலி மூலம் பேசிய அவர்,  தடுப்பூசி அடிப்படையிலான தொழில்நுட்பங்களை பகிர்வதற்கு நாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றார். இந்த அடிப்படையில் டிரிப்ஸ் ஒப்பந்தத்தை நாம் அணுக வேண்டும் என்ற அவர், தடுப்பூசியில் தேசியவாதம் இருக்க முடியாது என்றார். இந்த விவகாரத்தில் நாடுகள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். திறந்த தன்மை, வெளிப்படைத்தன்மை, நேர்மை, நிலைத்தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய கொள்கைகளின் அடிப்படையில் கொரோனாவுக்கு பிந்தைய எதிர்காலம் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
Read Entire Article