மெக்சிகோவில் விபத்து: ஓடுதளம் உடைந்து சாலையில் விழுந்த மெட்ரோ ரயில்…20 பேர் பலி..!!

4 days ago 1
metro train - updatenews360

வட அமெரிக்கா: மெக்சிகோ நகரில் ஓடுதளம் உடைந்து மெட்ரோ ரயில் சாலையில் விழுந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வட அமெரிக்காவின் மெக்ஸிகோ நகரில் ஓடுதளம் உடைந்து மெட்ரோ ரயில் சாலையில் விழுந்த சம்பவத்தில் 20 நபர்கள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 10 மணி அளவில் இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது.
12 வது மெட்ரோ ஓடுதள பாதையில் சென்று கொண்டிருந்த ரயில், சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 20 நபர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் 40 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து கேள்விபட்ட மெக்ஸிகோ நகரின் மேயர் கிளாடியா ஷெய்ன்பாம் நிகழ்விடத்திற்கு விரைந்து சோதனை செய்தார். விபத்து நடந்த கட்டுமானம் மீது புகார்கள் எழுந்துள்ளன. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article