கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவான பிரபு செளந்தர்யா என்ற பெண்ணை திருமணம் செய்தது கடந்த வாரம் பத்திரிக்கைகளில் இடம்பிடித்தது. 19 வயது பெண்ணான செளந்தர்யா 39 வயது மணமகனான பிரபுவை மணமுடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இருந்தாலும் பிரபு, தானும் செளந்தர்யாவும் நீண்ட நாட்களாக 5 வருடத்துக்கும் மேல் காதலித்து வந்தோம் அவரது விருப்பத்துடன் தான் இந்த திருமணம் நடந்துள்ளது என கூறினார்.
இது தொடர்பாக செளந்தர்யாவின் தந்தையான கோவில் குருக்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததில் செளந்தர்யாவை ஆஜர்படுத்துமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றும் பேட்டியளித்துள்ள செளந்தர்யாவின் தந்தையான கோவில் குருக்கள் என் மகளை ஏமாற்றி மனதை கலைத்து திருமணம் செய்ய முயன்றுள்ளார் எம்.எல்.ஏ பிரபு என் மகளை தங்கை போல நினைத்து பழகினார் அவரது வயது வித்தியாசம் காரணமாகவே நான் இந்த திருமணத்தை எதிர்க்கிறேன்.பிரபு எனக்கு 1 கோடி தருவதாக கூறினார் அனைத்தையும் மறுத்து விட்டேன் என செளந்தர்யாவின் தந்தை கூறியுள்ளார்.