பிக் பாஸின் இந்த சீஸனின் சோம் சேகர், பாலாஜி முருகதாஸ் என்று ரசிகர்களுக்கு பரிட்சமில்லாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டு உள்ளனர். அந்த வகையில் மாடல் அழகானான பாலாஜி முருகதாஸ் தேனியில் பிறந்த இவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் மாடலிங் மீதிருந்த ஆர்வத்தால், இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கூட கலந்து கொண்டிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றார்.அதே போல இவர் 2017 ஆம் ஆண்டின் பிரபல டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் Mr. Perfect Body என்ற பட்டத்தை கூட வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலாஜி ஒருவர் கடந்த ஆண்டு மீனா நடிப்பில் வெளியான மெர்லின் காமாக்ஷி என்ற வெப்சீரிஸ் என்கூட நடித்திருக்கிறார்.
அதேபோல் இந்த டாஸ்கின் போது பாலாஜி முருகதாஸ் பேசும் போது, தனது தாய், தந்தை இருவரும் குடிக்கு அடிமையானவர்கள் என்றும், குடித்துவிட்டு அப்பா தன்னை நள்ளிரவில் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஒரு குழந்தையைப் பெற்று சரியாக வளர்க்க முடியாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பாலாஜி முருகதாஸ்ஸின் இந்த கதையை கேட்டு போட்டியாளர்களும் பார்வையாளர்களும் கண் கலங்கினர்.
மேலும், பாலாஜி முருகதாஸை Self Made Man என்று அனைவருமே சமூக வலைதளத்தில் புகழ்ந்து தள்ளினர். இப்படி ஒரு நிலையில் பாலாஜி முருகதாஸ் நீச்சல் குளத்தில் பீரை தலையில் ஊற்றிக்கொண்டு டிக் டாக் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவந்தது. இப்படி ஒரு நிலையில் நீச்சல் குளத்தில் பாலாஜி முருகதாஸ் பெண் ஒருவரை வைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி இருப்பதை கண்டு ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.