Entertainment
Bigg Boss Tamil 4 Promo Voting Started For Next Week Captian
Published
3 months agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் கடந்த (அக்டோபர் 4 )ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒரு வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. கடந்த 5 நாட்களில் சுரேஷ் மற்றும் அனிதா சம்பத் பிரச்சினையைத் தவிர வேறு எந்த விஷயமும் சுவாரசியமாக நடைபெறவில்லை. அதே போல கடந்து வந்த பாதை என்ற டாஸ்கில் ஒரு சில போட்டியாளர்கள் சொன்ன அவர்களின் வாழ்க்கைக் கதைகள் கொஞ்சம் மனதை கவர்ந்தது. பொதுவாக சனி மற்றும் ஞாயிறுகளில் தான் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.
அதற்கு முக்கிய காரணமே சனி மற்றும் ஞாயிறுகளில் போட்டியாளர்களை கமல் சந்தித்து கொஞ்சம் பஞ்சாயத்து செய்வார் ஆனால், முதல் வாரம் என்பதால் அப்படிப்பட்ட சுவாரசியமான பஞ்சாயத்துகள் எதுவும் நடக்காது என்று ஏதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் நேற்றைய நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவத்தியின் ‘எச்சில்’ பஞ்சாயத்தை கொஞ்சம் அலசி ஒரு வழியாக இந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார் கமல்.
நேற்றைய நிகழ்ச்சியில் கமல் வந்தும் கொஞ்சம் போராக தான் சென்றது. போதாதா குறைக்கு ஏற்கனவே நடந்து முடிந்த ஹார்ட் குத்தும் டாஸ்க்கையை மீண்டும் ஆரம்பித்து வைத்தார் கமல். அதிலும் போட்டியாளர்கள் மறுபடியும் கதையை சொல்லி இந்த டாஸ்கை மீண்டும் துவங்கியது, ஸ்பா சாமி என்று ஆகிவிட்டது. இப்படி ஒரு நிலையில் இன்றும் அதே ஹார்ட் குத்தும் டாஸ்க் தான் தொடர்ந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க முதல் வாரம் என்பதால் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் ஏற்கனவே துவங்கிவிட்டது. கடந்து வந்த டாஸ்கின் அடிப்படையில் ரேகா, சனம் செட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா, ஆஜித், சிவானி, சுரேஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் அடுத்த வார நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இந்த எட்டுப் பேரிலிருந்து தான் மற்ற போட்டியாளர்கள் அடுத்த வார நாமினேஷனுக்கு தேர்ந்தெடுக்க முடியும்.