Entertainment
Pandian Stores Shanthi Williams Clarifies About Her Sons Death
Published
3 months agoon
By
admin
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி மெட்டிஒலி வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவரது மகன் சந்தோஷ் என்பவர் மாரடைப்பால் காலமாகி இருந்தார். இதுகுறித்து வெளியான சில செய்திகளில் சந்தோஷ் திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார்.
https://www.facebook.com/photo?fbid=3313039518749387&set=a.1654723241247698
மேலும், இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் அதற்கு இவர் அடிமையாகி விட்டதாகவும். தனது அறைக்குச் சென்று சந்தோஷ் காலை வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், அறைக்கு சென்று பார்த்தபோது அவர் படுக்கை அறையில் சடலமாக கிடந்துள்ளார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள சாந்தி வில்லியம்ஸ், போலியான செய்திகளை வெளியிடுவோரை எச்சரித்து உள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், என் மகன் மாரடைப்பால் உயிர் இறந்துவிட்டான். ஆனால், அவன் மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டான் என்றெல்லாம் கதை காட்றாங்க.
என் மகனுக்கு மற்றவர்களை போல குடிப்பழக்கம், புகை பழக்கம் இருந்தது உண்மை தான். கடந்த வாரம் சனிக்கிழமை வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு என் பேத்தி யோடு வெளியில் சென்று இருக்கிறான் பாதியிலேயே தனக்கு சோர்வாக இருக்கிறது என்று அவளை திரும்பும் வீட்டிற்கே அழைத்து வந்து இருக்கிறான். வீட்டுக்கு வந்ததும் ஒரு மாதிரியா இருக்கிறது நான் போய் படுக்கிறன் என்று சொல்லிவிட்டு படுத்திருக்கிறான். அவனுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட எழுத கை வலிக்கிறது என்று என்னிடம் சொன்னான் அதுக்குள்ள இப்படி ஆகிவிட்டது. கொரோனா பிரச்சினை காரணமாகத்தான் அவனது உடலை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தோம்.

ஆனால் ஒருசில யூடியூப் சேனலில் அவர் குடும்பத்தில் பிரச்சினை,மனைவி கூட வாழ மர்மமான முறையில் மரணம் என்றெல்லாம் இஷ்டத்துக்கு செய்தி வெளியிட்டு விட்டார்கள். அவன் மனைவி அவன் கூட இல்லை என்பது உண்மைதான். ஆனால் அந்த பெண் வீட்டை விட்டு சென்று நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. அந்தப் பெண் எங்கே இருக்கிறார்கள் என்றுகூட எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவளைப் பற்றி எல்லாம் பெரிதாக என் மகன் கவலைப்படாமல் மிகவும் சந்தோஷமாக தான் இருந்தான். என்னைக் கேட்டு இருந்தால் நான் சொல்லியிருக்க மாட்டேனா இந்த சாந்தி வில்லியம்ஸை எல்லோரும் சாந்தமாத்தான் பாத்துருப்பாங்க. யாரும் என்னை ராட்சசியா பார்த்தது கிடையாது. இன்னைக்கு என்னை ராட்சசியா மாத்திட்டாங்க என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
You may like

Leave a Reply