Connect with us

Entertainment

அட, சோம் சேகர் சூரரை போற்று படத்தில் நடித்துள்ள காட்சி. இத பத்தி அவர் பிக் பாஸ்ல கூட சொல்லவே இல்லையே.

Published

on


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமில்லதா பல புது முகங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர், அந்த வகையில் சோம் சேகரும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோம் சேகரின் என்ட்ரியை பார்த்த போது யார் இவர்கள் என்று தான் அனைவரின் மனதிலும் ஓடியது. ரசிகர்களுக்கு வேண்டுமானால் சோம் சேகர் புதிதான நபராக இருக்கலாம். ஆனால் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே வந்திருக்கிறாராம். கடந்த 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சி விஜய்யை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. அதே போல அந்த நிகழ்ச்சியில் இவர் இறுதி போட்டி வரை வந்தார். அதன் பின்னர் இவரை விஜய் டிவியில் காண முடியவில்லை. மேலும், இவர் அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்திருக்கிறார். மேலும் .பல்வேறு விளம்பர படங்களில் கூட நடித்திருக்கிறாராம். ஆனால், இவருக்கு சின்னத்திரையிலும் சரி, வெளியிலும் சரி சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் தனது பாதையை கொஞ்சம் மாற்றிய சோம் சேகர் MMA எனப்படும் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் எனப்படும் குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விளையாட்டில் இருந்து வருகிறாராம் சோமசேகர். மேலும், இவர் மாநில மற்றும் தேசிய அளவில் MMA போட்டிகளில் தங்கப் பதக்கங்களை கூட வென்று இருக்கிறாராம். ஆனால் இவருக்கு சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் ஆசை.

இப்படி ஒரு நிலையில் இவர் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ள காட்சியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொரங்கா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘சூரரை போற்று’ திரைப்படம் நேற்று (அக்டோபர் 11) அமேசான் தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

The post அட, சோம் சேகர் சூரரை போற்று படத்தில் நடித்துள்ள காட்சி. இத பத்தி அவர் பிக் பாஸ்ல கூட சொல்லவே இல்லையே. appeared first on Tamil Behind Talkies.



Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *