Connect with us

Entertainment

Bigg Boss Suresh Chakravarthy Reveals About Archana

Published

on


suresh

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக ஐந்தாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசனில் சோமசேகர், பாலாஜி முருகதாஸ் போன்ற ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத போட்டியாளர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தியும் ஒரு சிலருக்கு தெரிந்த முகமாக இருந்தாலும் பலருக்கு இவரைப்பற்றி தெரியாமல்தான் இருந்தது. ஆரம்பத்தில் இவரை அனைவருமே ஒரு டெரரான பீஸ் என்றுதான் நினைத்தார்கள். அதேபோல இவர் இந்த சீசன் வனிதா என்றும் பலரும் விமர்சித்து வந்தார்கள்.

ஆனால் போகப்போக இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து இவருக்கு என்று ஒரு தனி ஆர்மியே அமைந்துவிட்டது. என்னதான் ஒரு சில நேரத்தில் மற்ற போட்டியாளர்களை வேண்டுமென்றே வம்பு இழுந்தாலும் டாஸ்க் என்று வந்துவிட்டால் சுரேஷ் மற்ற போட்டியாளர்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோல தான் செய்யும் தவறுகளை மிகவும் நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் இதனாலேயே இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துவந்தது . சுரேஷும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தான். இவர் விசு, எஸ் பி பி என்று பல்வேறு ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஷாக்காக தான் இருந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு சில நாட்கள் முன்பாக சுரேஷ் சக்ரவர்த்தி வெறும் சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிட்டு வந்தால் மற்றவர்கள் எவ்வளவு சமாதானம் செய்தும் அவர் இறுதிவரை நிஷா சமைத்த உணவை மட்டும் தான் உண்டுவந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுரேஷ் சக்ரவர்த்தி இது குறித்து பேசுகையில் நீதிமன்ற டாஸ்க்கில் தனக்கு எதிராக கை தூக்கிய அழைத்து நபர்களின் சமையலை இனி சாப்பிடக் கூடாது என்று முடிவு எடுத்தேன் என்று கூறியிருக்கிறார்.

வீடியோவில் 21 நிமிடத்தில் பார்க்கவும்

அதே போல அர்ச்சனா குறித்து பேசுகையில், அந்த அம்மாவிற்கு அனைவருக்கும் தான் தான் படியளப்பது என்று நினைப்பு. அனைவருக்கும் சோறு போட்டால் தன்னை அனைவரும் நல்லவர் என்று நினைத்துக்கொள்வார்கள் என்று நினைத்தது. அதனால் தான் கிட்சன் டீமில் இருந்து அது வரவே இல்லை. நான் என்னவோ ஆஸ்திரேலியாவில் ரோட்டில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இது மாதிரி இது வந்து எனக்கு சோறு வைக்கிற மாதிரி காட்டும். அதோட ஸ்ட்ராங் பாய்ண்ட் அது தான் அதுனால் தான் அதில் கை வைத்தேன்.

-விளம்பரம்-



Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *