அந்தக்காலத்தில் இனிமையான பல பாடல்கள் எழுதியவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அந்தக்காலத்தில் வந்த பல படங்களில் தத்துவார்த்தமான பாடல்களை அதிகம் எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தூங்காதே தம்பி தூங்காதே, சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா போன்ற உயரிய தத்துவப்பாடல்களை எழுதியவர் இவர்.
நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வரும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.