Entertainment
Actor Vishal And Fiance Anisha’s Going To Engage Agian
Published
2 months agoon
By
admin
தமிழில் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் 16-ந்தேதி சனிக்கிழமை, ஐதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினுரில் நடைபெற்றது. மேலும், இவர்களது திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

விஷாலின் வருங்கால மனைவி அனிஷா, விஷலுடன் இருந்த புகைப்படத்தையும், நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த அணைத்து புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்துநீக்கியும் இருந்தார். எனவே, விஷாலின் திருமணம் நின்று விட்டதாக கூறப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி விஷாலின் பிறந்தநாளையொட்டி விஷாலுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் அனிஷா.
மேலும், விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அனிஷா, விஷாலுக்கு தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்டுத்தி இருந்தார். ஆனால், இந்த ஆண்டு விஷால் பிறந்தநாளுக்கு அனிஷா எந்த ஒரு வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. அதே போல விஷால் – அனிஷா திருமணம் நின்றுவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் விஷால் திருமணம் நின்றுவிட்டதாக நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், பத்திரிகையாளர் விஷால் கிட்ட எப்போ கல்யாணம் என்று கேட்ட போது, லட்சுமி மாதிரி ஒரு பொண்ணு வரும் என்று சொன்னார். பின்னர் வரலக்ஷ்மியிடம் காதலில் இருந்து வந்தார். பின்னர் நான் சிகப்பு மனிதன் படத்தின் போது லட்சுமி மேனனுடன் பயங்கர நெருக்கமாக நடித்தார். அப்போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி உண்டாகி காதல் ஏற்பட்டது. பின்னர் தான் அனிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் லட்சுமி மேனன் விஷால் வீடியோ பார்த்துவிட்டு அந்த திருமணத்தை நிறுத்திவிட்டார்.
இதையும் ஒரு பேட்டியில் உறுதி படுத்தினார் லட்சுமி மேனன். ஆனால், விஷாலின் நன்னம்பிக்கை கருதி பல பத்திரிகையில் வெளிவரவில்லை என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அனிஷா அல்லாவிற்கு வேறு ஒருவருடன் நிட்சதர்த்தம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியானது . அதே போல கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அனிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த பதிவையும் போடாமல் இருந்து உள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.