Entertainment
Bigg Boss Promo Shivani Is Nominated For This Week
Published
2 months agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 56 நாட்களை கடந்து கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்திருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி என்று நான்கு பேர் வெளியேறிய நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஐந்தாவது போட்டியாளராக சம்யுக்தா வெளியேறி இருந்தார் இதுவரை வெளியேறிய 4 பேரை விட சம்யுகதாவின் வெளியேற்றம் தான் அவருக்கு மிகப் பெரியஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது மறுக்க முடியாது ஒன்று.
இதற்கு முக்கிய காரணமே கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அனிதா இடம் பெற்று இருந்தார். ஆனால் கடந்த வாரம் பிக்பாஸ் Nomination Topple card என்ற புதிய பவர் ஒன்றை பிக்பாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இதனைமிகவும் தந்திரமாக வென்ற அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்திருந்தார். ஒருவேளை இந்தப் பவரைபிக் பாஸ் கடந்த வாரம் அறிமுகம் செய்யப் படாமல் இருந்திருந்தால் சம்யுக்தாவிற்கு பதிலாக அனிதாதான் வெளியேறி இருப்பார் என்பது பலரின் நம்பிக்கை.
அதேபோல கடந்த வாரம் நாமினேஷன் இல் இடம்பெற்ற சோம் சேகர் ஜித்தன் ரமேஷ் நிஷா ஆகியவர்களுக்கு கூட மிகவும் கடுமையான போட்டி நிலவியது. நேற்றைய நிகழ்ச்சியில் இதை தெரிவித்த கமல் சம்யுக்தாவிற்கு முன்னதாக வந்த போட்டியாளர்களை விட ஒரு சில ஆயிரம் வாக்குகளைத் தான் அதிகமாக பெற்றார் என்று கூறியிருந்தார். அதேபோல சமந்தாவிற்கு 4 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும் கூறி இருந்தார் கமல்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியுள்ளது. அதை வைத்து பார்க்கும் போது ஆரி, ஷிவானிக்கு அதிகப்படியான வாக்குகள் விழுந்துள்ளது. இந்த வாரம் ஷிவானி நாமினேட் ஆனால், கண்டிப்பாக அவர் வெளியேற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் இவர் உள்ளே நுழைந்த நாள் முதல் இதுவரை பாலாவுடன் சுற்றி வருவதை தவிர வேறு எதையும் செய்தது போல தெரியவில்லை.