Entertainment
Bigg Boss Suchitra Reveals Why She Loves Bala This Much
Published
2 months agoon
By
admin
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 50வது நாளில்சுசித்ரா வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் வெளியேறியதற்கு ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த்னர். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது.

ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் வைல்டு கார்டு போட்டியாளரான சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.
எனவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை இந்த வாரம் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது கொஞ்சம் நாளைக்கு சமூக வலைதளத்தில் வர மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பாலாஜியின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலர், பாலாஜி உங்களை அப்படி அசிங்கப்படுத்தினர் இன்னுமா வரை ஆதரவு தெரிவிக்கிறீங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர். அதற்கு பதில் அளித்த சுசித்ரா, பாலாஜி ஒரு உண்மையான மனிதர், அவர் சத்தமாக பேசுவரே தவிர அவர் எனக்கு மரியாதையை கொடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.