Entertainment
நான் ஏ டீம் என்பதை புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன் – தனக்கு ‘சங்கி’ முத்திரை குத்தியவர்களுக்கு கமல் பதிலடி.
Published
2 months agoon
By
admin
தன்னை சங்கி என்றும் BJP ஆதரவாளர் என்றும் கேலி செய்த்தவர்களுக்கு நடிகர் கமல் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது முறைகேடு புகார் காரணமாக ஓய்வு நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்த தமிழக அரசின் செயலுக்கு மக்கள் நீதிமய்யம் கமல் கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார் கமல். அந்த வீடியோவில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது தமிழகத்தில் இதற்கு தகுதியானவர்கள் இல்லையா என்ற கேள்வியை நாம்தான் எழுப்பினோம். அந்த கேள்வி இப்போதும் தொக்கி நிற்கிறது அதில் மாற்றம் இல்லை, ஆனால் வந்தவரோ வளைந்துக்கொடுக்காதவர், அதிகாரத்துக்கு முன் நெளிந்துக்குழையாதவர்.
மற்ற நேரமெல்லாம் காந்தியம்,திராவிடம் பேசிவிட்டு முக்கியமான விஷயங்களில் ஆர்எஸ்எஸ்காரன் களுக்கு ஏதாவது என்றால் மிக வேகமாக கொந்தளித்து தான் யார் என்று காட்டிவிடுகிறார் தாமரைஹாசன். எவ்வளவு வேஷம் போட்டாலும் மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துரீங்களேடா pic.twitter.com/B8r8m1Coxk
— துலங்கு (@Thulangu) December 5, 2020
தமிழக பொறியியல் கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்தவேண்டும் என முனைந்தவர். பொறுப்பாளர்கள் நம் ஊழல் திலகங்கள், வளைந்துக் கொடுக்கவில்லையென்றால் ஒடிப்பதுதானே இவர்கள் வழக்கம், எவனோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஒரு பேடி எழுதிய மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் விசாரணைக்குழு மைத்திருக்கிறார்கள்.மொட்டையில் முடிவளராததால், மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என கடைப்போட்டு காத்திருக்கிறார்கள். முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கி இருந்தவர்களையும், பல்கலைக்கழக வாகனங்களை பயன்படுத்தியவர்களையும் விசாரித்து விட்டீர்களா?
மொட்டையில் முடிவளராததால், மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என கடைப்போட்டு காத்திருக்கிறார்கள். முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கி இருந்தவர்களையும், பல்கலைக்கழக வாகனங்களை பயன்படுத்தியவர்களையும் விசாரித்து விட்டீர்களா?தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை, கரைவேட்டிகள் இங்கும் மூக்கை நுழைப்பது ஏன். இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் இப்போது மதிப்பெண்களை கொடுத்து மாணவர்களை வளைக்க பார்க்கிறார்களா. சூரப்பாவின் கொள்கை நிலைப்பாடு அரசியல் செயல்பாடு குறித்து நமக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால் ஒருவன் தன் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால், கமல்ஹாசன் ஆன நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன்.
யோவ். இதுக்குத்தான் டார்ச் லைட்டை சின்னமா வச்சியா ? @ikamalhaasan pic.twitter.com/c3qGGPkI7T
— Savukku_Shankar (@savukku) December 7, 2020
நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதிமய்யம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இது ஒரு கல்வியாளருக்கும் அரசியல்வாதிக்குமான பிரச்சினை இல்லை. நேர்மையாளர்களுக்கும், ஊழல்வாதிகளுக்குமான போர். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் உன் வாழ்க்கையை அழிப்போம். அவதூறு பரப்பி உன் அடையாளத்தைச் சிதைப்போம் என சூரப்பாவுக்கும் அவர்போல் பணியாற்றுபவர்களுக்கும் விடுக்கும் எச்சரிக்கை.சகாயம் தொடங்கி சந்தோஷ்பாபு வரை இவர்களால் வேட்டையாடப்பட்டவர்களின் பட்டியல் பெரிது. பேரதிகாரிகள் இவர்களோடு போராடி களைத்து விருப்ப ஓய்வு பெருகிறார்கள் என்றால் சாமானியனின் கதி என்ன? இதை இனிமேலும் தொடர் விடக்கூடாது. இன்னொரு நம்பி நாராயணன் இங்கு உருவாக விடக்கூடாது.
தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம்.
ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.
(2/2)— Kamal Haasan (@ikamalhaasan) December 7, 2020
நேர்மைக்கும் ஊழலுக்குமான மோதலில் அறத்தின் பக்கம் நிற்பவர்கள் தங்கள் மவுனம் கலைத்து பேசியே ஆகவேண்டும்.
குரலற்றவர்களின் குரலாக நாம்தான் மாறவேண்டும். நேர்மைதான் நமது சொத்து அதையும் விற்று வாயில் போட்டுவிடத் துடிக்கும் இந்த ஊழல் திலகங்களை ஓட ஒட விரட்ட வேண்டும். வாய்மையே வெல்லும் என்று பேசி இருந்தார் கமல். இப்படி ஒரு நிலையில் கமலின் இந்த வீடியோவை கேலி செய்த பலர் கமலை சங்கி என்று விமர்சித்து இருந்தார்கள்.
இதற்கு பதிலடி கொடுத்த கமல், அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம்.ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
The post நான் ஏ டீம் என்பதை புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன் – தனக்கு ‘சங்கி’ முத்திரை குத்தியவர்களுக்கு கமல் பதிலடி. appeared first on Tamil Behind Talkies.