Connect with us

Entertainment

Bigg Boss Archana Shouted On Rio And Nisha Check Why

Published

on


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 64 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் வெறியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேறி இருந்தார். இன்னும் 12 மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் கடந்த வாரமே நடைபெற்று முடித்துவிட்டு கடந்த வாரம் கால்சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது அந்த டாஸ்கில் தோல்வி பெற்ற போட்டியாளர்கள் அடிப்படையில் பாலாஜி அனிதா, ஆரி, அர்ச்சனா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள்.

நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான போட்டியில் அனைவருமே பங்கு பெற்று இருந்தார்கள்.இதில் அனிதா வெற்றி பெற்று இந்த வார தலைவர் ஆனதால் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்துவிட்டார். இதுமட்டுமல்லாமல் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வேறு ஒரு டிவிஸ்ட்டையும் வைத்திருந்தார். அதாவது கடந்த வாரம் போட்டியாளர்கள் 1ல் இருந்து 13 வரை தங்களை வரிசைப்படுத்தி இருந்தார்கள். இதில் முதல் மூன்று இடத்தில் ஆரி, பாலாஜி, சனம் ஷெட்டி ஆகியோர் வந்தார்கள். இதில் சனம் ஷெட்டி கடந்த வாரம் வெளியேறியதால் அவருக்கு பதிலாக பாலாஜிக்கு வாய்ப்பு கிடைத்தது. அதேபோல அர்ச்சனாவும் டாப் 3 இடத்தில் வந்து விட்டார்.

இந்த டாப் 3 இடத்தை பிடித்த ஆரி பாலாஜி அர்ச்சனா ஆகிய மூவருமே இந்த வார நாமினேஷன் இல் இடம் பெற்று இருந்தார்கள் ஆனால் இவர்கள் மூவருக்கும் பிக்பாஸ் ஒரு சிறப்பான வாய்ப்பைக் கொடுத்தார் அதாவது இந்த மூவருக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தான் அது இதில் பாலாஜி கேப்ரில்லாவை நாமினேட் செய்தார் ஆரி ஜித்தன் ரமேஷையும், அர்ச்சனா சோம் சேகரையும் நாமினேட் செய்தார்.

இதன் அடிப்படையில் இந்த வாரம் ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகியிருக்கிறார்கள்.தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ரியோ மற்றும் அர்ச்சனாவுக்கு இடையே ஏதோ வாக்குவாதம் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் அர்ச்சனாவை பாலா ஏதோ சமரசம் செய்ய முயற்சிக்கிறார். ஆனால், விளையாட்டை விளையாடுங்கள் என்று அர்ச்சனா ஆவேசத்தில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார். இதைப் பார்க்கும்போது அர்ச்சனாவின் அன்பு கேங்கிற்கு ஏதோ பிரச்சனை ஏற்படுவது போலத்தான் தெரிகிறது. என்ன நடந்தது என்பதை நிகழ்ச்சியில் தான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-



Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *