Connect with us

Uncategorized

கேப்டனாக விராட் கோலி புதிய சாதனை – Chennaionline

Published

on


சிட்னியில் கடந்த 5 ஆம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.

இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான போட்டியிலும் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) தொடரை கைப்பற்றிய முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

இதற்கு முன்பு, 2018-19-ம் ஆண்டில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கிலும், 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்று இருந்தது.

ஒட்டுமொத்தத்தில் இந்த சாதனையை படைத்த 2-வது கேப்டன் விராட் கோலி ஆவார். ஏற்கனவே பாப் டு பிளிசிஸ் தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி இத்தகைய சாதனையை ஆஸ்திரேலிய மண்ணில் படைத்துள்ளது.



Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *