விஜய் டிவியில் வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகை சித்ரா இன்று ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சின்னத்திரையுலகில் கடும் அதிர்ச்சி நிலவுகிறது.
இது குறித்து கருத்து கூறியுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ், நடிகை # சித்ராவின் மரணம் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும். மிக விரைவில் சென்றுவிட்ட மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் திறமையான கலைஞர்! தற்கொலை என்பது பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வல்ல என்பதை மக்கள் உணர வேண்டும், ஒரு சமூகமாக, இந்த உண்மையை முன்பை விட வலுவாக வலியுறுத்த வேண்டும்!என ஐஸ்வர்யா ராஜேஸ் கூறியுள்ளார்.