
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பல இளம்பெண்களின் மனம் கவர்ந்தவராக விளங்கியவர் வி.ஜே சித்ரா. ஆரம்ப காலத்தில் தொகுப்பாளராக பணியாற்றிய இவர் சமீபமாகத்தான் டிவி சீரியல்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார்.
இவர் நடித்து வரும் சீரியல் பூந்தமல்லி அருகே நடந்து வருவதால் அங்குள்ள நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி இருந்து வந்தார்.
இவருடன் இவரது வருங்கால கணவர் ஹேமந்த்குமாரும் உடனிருந்த நிலையில் தான் குளிக்க இருப்பதால் வெளியே செல்ல சொல்லிவிட்டு சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் உட்பட இவர் நடிக்கும் சீரியல்களின் கலைஞர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர். இவருக்கு நிச்சயதார்த்தம் ஆகி இருந்த நிலையில் இவரது வருங்கால கணவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவரது மரணம் கொலையா தற்கொலையா என மர்மம் நிலவுகிறது.
The post சித்ரா மரணம் குறித்து சின்னத்திரை கலைஞர்களிடம் விசாரணை first appeared on Tamilnadu Flash News.
Read More