Entertainment
Pandian Stores Chitra Commited Suicide Shocking Photo
Published
2 months agoon
By
admin
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பல லட்ச ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகையும் தொகுப்பாளினியுமான சித்ரா.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான்.

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இவருக்கென்று சமூக வலைத்தளத்தில் தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.
இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். நடிகை சித்ரா ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படபிடிப்பு முடித்துவிட்டு இன்று அதிகாலை (டிசம்பர் 8) 2.30 ,மணி அளவில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அந்த ஹோட்டலில் அவரது வருங்கால கணவரான ஹேமந்த் இருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.

சித்ரா அறையின் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து அறையை திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் தான் கட்டி இருந்த புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிவியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஹேமந்த் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சித்ராசின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்திவருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் பிணமாக கிடக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நயிட்டிவுடன் இருக்கிறார் சித்ரா. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் இவருக்கா இந்த நிலை என்று புலம்பி வருகின்றனர்.