Entertainment
Pandian Stores Chitra Last Video Story On Her Instagram
Published
1 month agoon
By
admin
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பல லட்ச ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகையும் தொகுப்பாளினியுமான சித்ரா.
நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இவருக்கென்று சமூக வலைத்தளத்தில் தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது. இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இன்று அதிகாலை (டிசம்பர் 8) 2.30 ,மணி அளவில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அந்த ஹோட்டலில் அவரது வருங்கால கணவரான ஹேமந்த் இருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.சித்ரா அறையின் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து அறையை திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் தான் கட்டி இருந்த புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிவிய வந்துள்ளது.
இப்படி ஒரு நிலையில் சித்ரா, இறுதியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. நேற்று இரவு 7 மணி அளவில் சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதே போல நேற்று இரவு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் சின்னத்திரை நடிகை சரண்யாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக பதிவு செய்யப்பட்ட செல்ஃபி வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு வீடியோவில் மேடம் லவ் பண்ணதும் பண்ணாங்க, எப்பயும் போன் தான் எனக்கூறி சித்ராவை சரண்யா கிண்டலடிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால், அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மறைவதற்குள் சித்ரா இந்த உலகைவிட்டு மறைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.