1958ம் ஆண்டு கேரளாவின் கொல்லங்கோடுவில் பிறந்த ரகுவரன். கோவை நகரத்திலேயே வளர்ந்தார்.காக்கா என்ற மலையாள படத்தின் மூலம் ரகுவரன் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.
தமிழில் 1982ம் ஆண்டு வந்த ஏழாவது மனிதன் படத்தின் மூலம் அறிமுகமானார் இவர்.
மிகச்சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் இவர் . இருப்பினும் வில்லத்தனமான நடிப்பில் இவரை மிஞ்ச ஆள் இல்லை.
தமிழ் சினிமாவின் வில்லன் ஆஜானுபாகுவாக இருப்பான் என்ற இலக்கணத்தை உடைத்து எறிந்தார் இவர். மிக ஒல்லியான தேகத்துடன் மிரட்டலான வில்லன் நடிப்பில் அசத்தினார் இவர்.
பூவிழி வாசலிலே படத்தில் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் டெரர் வில்லனாக அசத்தி இருப்பார்.
பாட்ஷா படத்தில் இவர் ஏற்று நடித்த மார்க் ஆண்டனியையும், முதல்வன் படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லத்தனமான முதல்வர் வேடத்தையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.புரியாத புதிர் படத்தில் இவர் பேசிய ஐ நோ டயலாக்கை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. சிவசங்கரி எழுதிய தியாகு என்ற படத்தில் மதுவுக்கு அடிமையானவராக இவர் நடித்ததை மறக்க முடியாது அந்த படம் மனிதனின் கதை என்ற பெயரில் சீரியலாக வந்தது இதையும் மறக்க முடியாது.
மறக்க முடியாத நடிகர் ரகுவரனின் பிறந்த நாள் இன்று.