
கடந்த 1999ம் ஆண்டு இதே நாளில் டிசம்பர் 10ம்தேதி அந்த வருட தீபாவளிக்கு வருவதாக இருந்த படம் கொஞ்சம் தாமதமாக சேது திரைப்படம் வெளியானது.ஆரம்பத்தில் சரியாக போகாத இந்த படம் பின்பு ரசிகர்கள், திரை விமர்சனங்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
முதலில் இப்படத்தை வாங்கி வெளியிட்ட தியேட்டர்கள் எல்லாம் படத்தை வாங்கி வெளியிட்டு விட்டு விக்ரமுக்கு இருந்த மார்க்கெட்டில் படம் ஓடாமல் படத்தை எடுத்து விட்டது.
விமர்சனங்களால் ஜெட் வேகமெடுத்த இந்த படத்தை திருப்பி கொடுத்த தியேட்டர்கள் எல்லாம் திரும்ப கொடுங்க என கேட்டு வாங்கிய சம்பவம் எல்லாம் நடந்தது தனிக்கதை.
விக்ரம் மிகுந்த சிரமப்பட்டு எடை குறைந்து நடித்ததற்கு தக்க பலன் கிடைத்தது. இப்படத்தை ஸர்மதா புரொடக்சன்ஸ் கந்தசாமி தயாரித்து இருந்தார். வெறும் 6 கோடியில் எடுக்கப்பட்டு கடுமையான வசூலை இப்படத்தின் தயாரிப்பாளருக்கு பெற்று தந்தது.
பாலா என்ற புதுமை இயக்குனர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார். படத்திற்கு பெரும்பலமாய் அமைந்தது இளையராஜா இசை. பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டும் பாடல்கள், பின்னணி இசை பிரமாதமாக அமைந்த திரைப்படம் இது.
தமிழ் சினிமா இருக்கும் வரைக்கும் மறக்க முடியாத உயர்ந்த படைப்பு சேது.
The post சேது திரைப்படத்துக்கு வயது 21 first appeared on Tamilnadu Flash News.
Read More