பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக இருப்பது திருவண்ணாமலை. எண்ணற்ற சித்தர்களும், மகான்களும் , யோகிகளும் இங்கு கிரிவலப்பாதையை 24 மணி நேரமும் சுற்றி வருகிறார்கள் என்பது ஐதீகம். இங்கு கிரிவலம் செல்வது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. வாழ்வில் நன்மை மட்டுமே நடக்கும் என்ற ஐதீகத்தில் இம்மலையை தேடி வருவர்.
நடிகர் ரஜினிகாந்தும் இம்மலையை தேடி ஒரு காலத்தில் அடிக்கடி வந்ததுண்டு. இங்கு வந்து அண்ணாமலையாரை வந்து வழிபட்டு செல்வார்.
விரைவில் ரஜினி கட்சி தொடங்க இருக்கும் நிலையில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் திருவண்ணாமலையில் 10 சிவாச்சாரியார்கள் கொண்டு மிருத்தியஞ்ஜெய ஹோமம், ஆயுஷ் யாகம் மற்றும் அபிஷேக வழிபாடு நடத்தினார் .
பின்பு அண்ணாமலையாரை வணங்கி சென்றார்.