Entertainment
Pandian Stores Vj Chitra Murder Or Suicide Post Mortem Report
Published
1 month agoon
By
admin
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று 2:30 மணி அளவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சித்ரா, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். மேலும் இதே ஹோட்டலில்தான் சித்ராவை நிச்சயதார்த்தம் முடித்த ஹேமந்த் தங்கியிருக்கிறார். சித்ரா ஹோட்டலுக்கு சென்ற போது தான் குளித்து விட்டு வருகிறேன் அதனால் வெளியே செல்லுங்கள் என்று ஹேமந்த்திடம் கூறியதாகவும் பின்னர் ஹோட்டல் அறையின் வெளியே நின்று கொண்டிருந்த ஹேமந்த் உள்ளே சென்ற சித்ரா நீண்ட நேரம் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியரை அழைத்து வேறு ஒரு சாவியை போட்டு அறையை திறந்து பார்த்தபோது சித்ரா தூக்கிவிடும் தங்கி இருந்ததாக கூறியிருந்தார்.
இதையடுத்து சித்ராவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையை துவங்கினர். சித்ரா மற்றும் ஹேமந்த்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது. ஆனால், சித்ராவின் மரணத்திற்கு பின்னர் அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தங்களுக்கு அக்டோபர் மாதமே பதிவு திருமணம் முடிந்து விட்டதாக கூறி பலருக்கும் ஷாக் கொடுத்தார் ஹேமந்த். அதேபோல சித்ராவின் நெருங்கிய தோழியான ரேகா நாயர் கூறுகையில் சித்ரா ஹேமந்த் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவன் நல்லவன் கிடையாது அவனுக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் கூறியிருந்தார்.
மேலும், சித்ரா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழை கிடையாது என்றும், சித்ரா, தனது புடவையில் தூக்கிட்டுகொண்டால் அவரது கழுத்தில் எந்த காயமும் ஏன் இல்லை என்றும், மேலும், தூக்குபோட்டு சித்ராவின் முகத்தில் நகக் கீறல்கள் எப்படி வந்தது போன்ற பல கேள்விகள் எழுந்தது. அதே போல சித்ராவின் தாயார் அளித்த பேட்டியில், சித்ராவை அவன் தான் (ஹேமந்த்) அடித்து கொன்றுவிட்டான் என்றும் கூறி இருந்தார். இதனால் சித்ராவின் மரணம் கொலையா ? தற்கொலையா ? என்று பலரும் சந்தேகித்து வந்தனர்.
இப்படி ஒரு நிலையில் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. தற்போது வந்துள்ள பிரேத பரிசோதனை முடிவின்படி சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சித்ராவின் முகத்தில் இருந்த நகக்கீரல்கள் சித்ராவுடைய நகக்கீரல்கள் தான் என்று தெரிவிக்கிப்பட்டுள்ளது. அதே போல சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்று போலீசார் அடுத்தகட்ட விசாரணையை துவங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.