Entertainment
Sun Music Mahalakshmi Latest Transformation Stunned Her Fans
Published
1 month agoon
By
admin
சின்னத்திரை சிரியலில் மிக பிரபலமான நடிகையாக மகாலக்ஷ்மி திகழ்ந்து வருகிறார். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். மேலும், நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள் பப்லியான தோற்றமும், கீச்சு கீச்சு குரல் மூலமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இதனை தொடர்ந்து இவர் தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

நடிகை மகாலக்ஷ்மி அவர்கள் எட்டு வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருகிறார். நடிகை மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தேவதையை கண்டேன்” என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த தொடரில் ஹீரோவாக ஈஸ்வரும், வில்லியாக மஹாலக்ஷ்மியும் நடித்து வருகின்றனர்.
இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் இனி இவர் தான் முல்லையா ? ஏற்பார்களா ரசிகர்கள் ?
இந்த தேவதையை கண்டேன் சீரியல் மூலம் மஹாலக்ஷ்மிக்கும், ஈஸ்வருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்து இருந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த பிரச்சனையால் தேவதையை கண்டேன் சீரியல் தற்போது விரைவில் முடிய போகிறது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது ஆனால், அந்த தொடரில் தொடர்ந்து நடித்து வந்தார் மஹாலக்ஷ்மி.

அதுமட்டுமல்லாமல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 தொடரிலும் நடித்து வருகிறார். மஹாலக்ஷ்மி என்றதும் நம் நினைவிற்கு முதலில் நினைவிற்கு வருவது அவரது பப்லியான தோற்றம் தான். ஆனால், சமீபத்தில் மஹா லட்சுமி தனது சமூக வளைத்ததில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில் ஸ்லிம் லுக்கில் இருக்கும் மஹாலக்ஷ்மியை பார்த்து பலரும் வியந்து போய்யுள்ளார்கள்.