தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வருகிறது இந்த தேர்தலை முன்னிட்டு பல கட்சிகளும் இப்போதிருந்தே கூட்டணி குறித்தும் தேர்தலில் தனியாக போட்டி இடுவதா என்பது குறித்தும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பிஜேபி , தேமுதிக கூட்டணிகள் போட்டி இட்டன எனினும் தமிழகத்தில் போதிய வெற்றியை இக்கூட்டணி பெறவில்லை.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தான் தேமுதிக கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் பொதுக்குழுவை கூட்டி ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.