கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசனுக்குரிய டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டது. ஒளி பாய்ச்சியது போல் சின்னம் என்பதால் கமல் ரசிகர்கள் இதை பெரிய அளவில் பிரபலப்படுத்தி கொண்டனர். அது அவர்களுக்குரிய பாஸிட்டிவ் ஆன சின்னமாக கருதப்பட்டது.
வருகின்ற சட்டசபை தேர்தலிலும் அந்த சின்னம் கிடைக்கும் என மக்கள் நீதி மய்யம் நினைத்திருந்த நிலையில் அந்த சின்னம் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் அவர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு டார்ச் சின்னம் வழங்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல், சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்காதீர்கள் என கமல் கூறியுள்ளார்.