கடந்த 9ம் தேதி அன்று சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மிகவும் வலிமையான பெண்ணாக கருதப்ப்பட்ட சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அவர் கணவர் ஹேம்நாத் விசாரணை நடைபெற்று வந்தது. நிச்சயதார்த்தம் நடந்து முறைப்படி திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவசரம் அவசரமாக இவர்கள் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் சித்ராவை ஹேம்நாத் டார்ச்சர் செய்து கொடுமைப்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு பொன்னேரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.