Entertainment
Bigg Boss Vanitha Slams Archana For Her Behavior
Published
1 month agoon
By
admin
நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா, அர்ச்சனா தன்னிடம் பொது இடத்தில் நடந்து கொண்ட விதத்தை பற்றி கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டு இருந்தனர். இந்த சீஸனில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக அர்ச்சனா மற்றும் சுசித்ரா நுழைந்து இருந்தார்கள். இதில் சுசித்ரா ஏற்கனவே வெளியேறி விட்டார். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
வீடியோ 10 : 20 நிமிடத்தில் பார்க்கவும்
கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது. ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். இவர் உள்ளே நுழைந்த நாள் முதலே தனக்கான ஒரு குழுவை அமைத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் ஒரு சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்.
அர்ச்சனா, தனது குழுவில் இருக்கும் யாரையும் தனியாக விளையாட விடமால் தொடர்ந்து தடுத்து வருகிறார். அதனால் தான் இவரது குழுவில் இருக்கும் மற்ற போட்டியாளர்களின் தனித்துவம் வெளியில் வராமல் இருந்து வருகிறது சொல்லப்போனால் கடந்த வாரம் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா வெளியேறியதற்கு காரணமே அர்ச்சனா அவர்களை கைபாகையாக மாற்றிவிட்டார் என்பதால் தான் என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து யூடுயூப் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி நடத்தி வரும் வனிதா, அர்ச்சனா குறித்து பேசியுள்ளார்.

அர்ச்சனாவை நான் இதுவரை இரண்டு மூன்று முறை வெளியில் பார்த்திருக்கிறேன். அவளுக்கு நான் யார் என்பது நன்றாக தெரியும், ஆனால். ஒரு மரியாதை நிமித்தமாக கூட எனக்கு ஒரு ஹாய் கூட சொல்லவில்லை. அவ்வளவு ஏன் சாதாரண ஒரு நகைப்பு கூட செய்யாமல் அவர் சென்றுவிட்டா.ர் எனக்கு மரியாதை கொடுக்க வேண்டாம். ஆனால், என்னுடைய அம்மா எவ்வளவு பெரிய நடிகை அதேபோல என்னுடைய அப்பா எவ்வளவு பெரிய நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு மரியாதை கிடையாதா. அவருடைய பெண் தானே நான். ஆனால், அவர் என்னை பார்த்ததும் ஏதோ வேறு கிரகத்தில் இருந்து வந்த ஏலியனை போல கண்டும் காணாமல் சென்று விட்டார் அந்த அளவிற்கு அவர் திமிறானவர் என்றும் கூறியுள்ளார்.