Entertainment
Kamal Haasan Announced He Is Ready To Join With Rajini
Published
1 month agoon
By
admin
தமிழகத்தில் வருகின்ற 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், ரஜினியின் புதிய கட்சி என தேர்தல் களம் காணவுள்ளனர். சமீபத்தில் தேர்தலுக்கான கட்சி சின்னங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நடிகர் கமலின் மக்கள் நீதி மையத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டவில்லை. ஆனால், புதுச்சேரியில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு நிலையில் நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான நடிகர் கமலஹாசன் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த 3 தினங்களாக தொடர்ந்து வருகிறார். இதற்காக மதுரை, தேனி, விருதுநகர் போன்ற பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் இருக்கும் தொழிலாளர்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமலஹாசனிடம் ரஜினி கட்சி துவங்குவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கமல், நாங்கள் இருவரும் போன் செய்தால் தொடர்பு கொள்ள முடியும் என்ற அளவில் நட்பில் இருந்து வருகிறோம். ரஜினிகாந்த் தற்போது தான் கட்சிக்கான பணிகளையே தொடங்கி இருக்கிறார். அவருடைய கொள்கைகள் என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம். மக்களுக்காக எந்த ஒரு ஈகோவையும் விட்டுக்கொடுத்து நானும் ரஜினியும் சேர தயாராக இருக்கிறேன். இருவரும் இணைந்து மக்களுக்கான கலப்பணியை செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார் கமல்.
கமலின் இந்த கூட்டணி கொள்கைக்கு ரஜினி என்ன சொல்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முன்னதாக ரஜினி மற்றும் பா ஜ க கூட்டணி நடக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல், ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்கிறதா என கமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் கூறுகையில் ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்யமாட்டார்கள் என நினைக்கிறேன். ரஜினியை வைத்து சினிமா வேண்டுமானால் செய்வார்கள் என்றும் கூறி இருந்தார்.