Entertainment
Vj Chitra Death Case Vijay Tv Rakshan Name In Trouble
Published
1 month agoon
By
admin
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.
சித்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் 6 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இப்படி ஒரு நிலையில் நேற்று (டிசம்பர் 14) சித்ராவின் மரணம் குறித்து இரு தரப்பினரையும் விசாரிக்க ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.நேற்று நண்பகல் 12 மணிக்கு துவங்கிய இந்த விசாரணை 3 மணி நேரம் நடைபெற்றது. நேற்று சித்ராவின் பெற்றோர்களிடம் விசாரணை முடிந்த நிலையில் இன்று (டிசம்பர் 15) சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட இருந்தது.
இதையும் பாருங்க : எனக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் என் அம்மா, அப்பா எவ்ளோ பெரிய ஸ்டார் – அர்ச்சனா குறித்து பேசிய வனிதா.
இந்த நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்து ஹேம்நாத்தை கைது செய்தனர். அதேபோல சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் சித்ரா நடித்துவந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் நடிகைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. மேலும் சித்ரா இறுதியாக கலந்துகொண்ட கேளிக்கை நிகழ்ச்சி குழுவிடமும் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சித்ரா குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்களை பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் நடிகை சித்ராவும் விஜய் டிவி தொகுப்பாளர் நடிகருமான ரக்ஷனுடன் ஷடேட்டிங் சென்றதாகவும் அப்போது ரக்ஷன் சித்ரா உடன் இருக்கும் நெருக்கமான வீடியோவை எடுத்து சித்ராவை மிரட்டியதாகவும் சித்ராவின் நெருங்கிய தோழி ஒருவர் கூறியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது அதேபோல இந்த விவகாரம் குறித்து பிரச்சனை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தபோது ரக்ஷன் அழைப்பை எடுக்கவில்லை என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.