Entertainment
Bigg Boss Hen And Fox Task Kurumpadam For Anitha And Others
Published
1 month agoon
By
admin
பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். கடந்த வாரம் நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேறி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோழிப்பண்ணை டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர் ஒவ்வொருக்கும் தங்க முட்டை ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இதனை நரிகள் ஆக இருக்கும் போட்டியாளர்களிடமிருந்து தங்களது முட்டைகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த டாஸ்க் நேற்றோடு முடிவடைந்து இருந்தது. இந்த டாஸ்க் ஆரம்பம் ஆன முதலே போட்டியாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டு தான் வந்தது. அதிலும் நேற்று ரியோ, கோழியாக இருந்த போது அவர் வைத்திருந்த முட்டையை தொடும் போது பல குழப்பங்கள் வந்தது. ரியோ வைத்திருந்த முட்டையை தொட ஒரே நேரத்தில் பலரும் அணுகினார்கள் அப்போது ரியோ, அனிதாவின் வாலை பிடிங்கிவிட்டார். அப்போது ஆரி, ரியோவின் முட்டையை தொட்டு விட்டதாக கூறினார்.
இதையும் பாருங்க : அது இல்லன்னா என்ன ? இது இறுக்கே – பிக் பாஸில் இருந்து சனம் கொண்டு வந்த பொருள்.
ஆனால், ஒரே சமயத்தில் எப்படி இரன்டு பெரும் முட்டையை தொட முயல்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார் ரியோ. ஆனால், ஆரி தான் நரிக் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது போல ரம்யா, அர்ச்சனா, அனிதா உட்பட பலரும் பேசினார்கள். உண்மையில் ரியோவின் முட்டையை தொடும் முன்னர் ஆரி, அர்ச்சனா, அனிதா, ரம்யா ஆகிய அனைவருமே யார் முதலில் போக வேண்டும் என்று முடிவெடுத்தனர். அப்போது ஆரி, தான் இரண்டாவதாக போகிறேன் என்று சொன்னதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

ஆனால், ரியோவின் முட்டையை தொட விளைய போது இதை அவர்கள் கடைபிடிக்கவில்லை. குறிப்பாக அனிதா ஆரிக்கு பதிலாக தானே இரண்டாவது முறை சென்று முட்டையை தொட்டார். இதைப்பார்த்த ஆரி ஏன் இப்படி பண்ணீங்க? என கேட்டார்.ஆனால் அர்ச்சனா, அனிதா, ரம்யா உள்ளிட்டோர் ஆரியின் வாதத்தை ஏற்கவில்லை. இதனால் இது சண்டையாக வெடித்தது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் முன்பு அனிதா உள்ளிட்டோர் பேசியதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவங்களுக்கு ஒரு குறும்படம் போடுங்க பாஸ் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.