Entertainment
கல்லூரியில் சீனியராக இருந்த போது அருண் விஜய்யை ரேகிங் செய்துள்ள சூர்யா – மதிக்காத அருண் விஜய். வீடியோ இதோ.
Published
1 month agoon
By
admin
பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். விஜய், சூர்யா துவங்கி அதர்வா கௌதம் கார்த்திக் வரை எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அந்த வகையில் சூர்யாவும் அருண் விஜய்யை போல ஒரு வாரிசு நடிகர் தான்.
— ArunVijay (@arunvijayno1) December 17, 2020
மேலும், சூர்யா நடிப்பதாக இருந்த ‘அருவா’ படத்தில் தற்போது அருண் விஜய் தான் நடித்து வருகிறார். இந்த படத்தை அவரது மாமாவும் இயக்குனருமான ஹாரி தான் இயக்க உள்ளார். இப்படி ஒரு நிலையில் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா தன்னை பற்றி பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அருண் விஜய், விஜய், சூர்யா அனைவருமே சென்னை லோயாலா கல்லுரியில் தான் படித்தவர்கள். மேலும், இதில் அருண் விஜய், சூர்யாவிற்கு கல்லூரியில் ஜூனியர் இப்படி ஒரு நிலையில் அருண் விஜய் கல்லூரி படிக்கும் போது ஒரு சுவாரசியமான விஷயம் நடந்துள்ளது
சமீபத்தில் அருண் விஜய் பகிர்ந்த அந்த வீடியோவில் பேசியுள்ள சூர்யா, நாங்கள் முதன் முதலில் சந்தித்தது கல்லூரியில் தான் நானும் ராகிங் செய்கிறேன் என்ற பெயரில் விஜயகுமார் சாரின் மகன் வருகிறார் என்று அவரை பராக்கு செய்யலாம் என்று நினைத்தேன் காலையிலிருந்து காத்திருந்தேன் என்னுடைய கண்ணில் அவர் படமே இல்லை பின்னர் மதியம் தான் என்னுடைய கண்ணில் பட்டார் அப்போது அவரிடம் என்னமோ 360 டிகிரி எல்லாம் அடிப்பியாமே பண்ணு என்று கேட்டேன், ஆனால், அவனும் இறுதி வரை என்னை மதிக்கவே இல்லை. கடைசியில் காலேஜ் முடிக்கும் வரை அவன் பண்ணவே இல்லை எனக்கு கேவலமா போச்சி என்று கூறியுள்ளார் சூர்யா.
With all your support and unconditional love #ProductionNo8 begins today!@Suriya_offl #ActorVijayakumar @arunvijayno1 #MasterArnavVijay @rajsekarpandian @srbabu742 @SarovShanmugam @gopinathdop @nivaskprasanna @amaranart @megha81053183 #VinothiniPandian pic.twitter.com/y1wKogI0I2
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) December 14, 2020
இது ஒருபுறம் இருக்க அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும், இவர்கள் இருவருக்கும் பூர்வி என்ற மகளும் அர்னவ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் அவரது மகன் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் சினிமாவில் களமிறங்க இருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாம். அடுத்தடுத்த தலைமுறை சினிமாவில் நுழைவது சந்தோஷமாக இருப்பதாக அருண்விஜய் டுவிட் செய்துள்ளார். அதுவும் சூர்யா தான் அவரது மகனை அறிமுகம் செய்ய இருக்கிறாராம்.
The post கல்லூரியில் சீனியராக இருந்த போது அருண் விஜய்யை ரேகிங் செய்துள்ள சூர்யா – மதிக்காத அருண் விஜய். வீடியோ இதோ. appeared first on Tamil Behind Talkies.