Entertainment
Bigg Boss Eviction Archana Gets Eliminated This Week
Published
4 weeks agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து 11வது வாரத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். கடந்த வாரம் நோமினேஷனில் சோம் ,கேப்ரில்லா,ஜித்தன் , நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தார்கள். எனவே, கடந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் நிஷாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.

எனவே, அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறை டபுள் ஏவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருந்தது. ஆனால், 12 போட்டியாளர்கள் அப்படியே இருந்தார்கள். 12 பேர் இருந்தும் நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடவில்லை. அதற்கு முக்கிய காரணமே அர்ச்சனாவின் லவ் பேட் தான். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் 2 எவிகஷன் செய்து லவ் பெட்டின் உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனவே, இந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது. ஆனால்,இந்த வாரம் ஆஜீத் வெளியேறி இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், இந்த வாரம் அர்ச்சனா தான் வெளியேறி இருப்பதாக உறுதியாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் டாஸ்க் மற்றும் வாரம் முழுதும் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர். இதில் அர்ச்சனா, ரம்யா, பாலாஜி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் அடுத்தவார தலைவர் பதிவுக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ச்சனா வெற்றி பெற்று அடுத்த வார தலைவராக வந்துள்ளார். எனவே, அவர் வெளியேறினால் அடுத்த வார கேப்டன் யார் என்பதும் கேள்விக்குள்ளாகியுள்ளது.