Entertainment
Bigg Boss Kamal Roast Ramya Pandian For Her Captaincy
Published
1 month agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து 11வது வாரத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். இதில் நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் 2 எவிகஷன் செய்து லவ் பெட்டின் உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனவே, இந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.
நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷனில் இருந்த ஆரி மற்றும் ரியோ காப்பாற்றப்பட்டு இருந்தனர். இதில் அர்ச்சனா, சோம், ஆஜீத், ஷிவானி, அனிதா ஆகியோர் மீதமிர்துந்தனர். இன்று வெளியாகி இருந்த முதல் இருக்கும் ப்ரோமோவை வைத்துப் பார்க்கும் போது இறுதியில் ஆஜீத், அர்ச்சனா, சோம் ஆகியோர் மற்றும் மீதமுள்ளனர். இதில் அர்ச்சனா வெளியேற்றப்பட்டதாக தகவல் ஏற்கனவே வெளியாகிவிட்டது.
இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் டாஸ்க் மற்றும் வாரம் முழுதும் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர். இதில் அர்ச்சனா, ரம்யா, பாலாஜி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் அடுத்தவார தலைவர் பதிவுக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ச்சனா வெற்றி பெற்று அடுத்த வார தலைவராக வந்துள்ளார். எனவே, அவர் வெளியேறினால் அடுத்த வார கேப்டன் யார் என்பதும் கேள்விக்குள்ளாகியுள்ளது.