Connect with us

Entertainment

அமெரிக்கானா கண்ணு தெரியும், இந்தியானா குருடாகிடுமா ? விக்னேஷ் சிவனின் பாவக் கதையை கழுவி ஊற்றிய இயக்குனர்.

Published

on


சமீப காலமாகவே OTT தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். அதிலும் கொரனோ காலகட்டத்தில் பல உச்ச நட்சத்திரத்தின் படங்கள் கூட OTT தளத்தில் வெளியாகி வருகிறது. அதே போல பல்வேறு நடிகர் நடிகைகளும் வெப் சீரிஸ் தொடர்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி Netflix தளத்தில் வெளியிட்டுள்ளனர். இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது. இந்த பாவக் கதையில், தங்கம், ஓர் இரவு, லவ் பண்ண விட்டுடணும், வான் மகள் என்று நான்கு கதை வெளியாகி இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜாதிப் பெருமை, குடும்ப கௌரவம் குறித்து கேள்வியெழுப்பக்கூடிய, விமர்சிக்கக்கூடிய படங்களாகவே இந்தப் படங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், பெருமையையும் கௌரவத்தையும் காப்பாற்றும் அமைப்பாக குடும்பம் இருக்கிறது என்பதுபோல முடிகின்றன இந்தப் படங்கள். 

இதில் லவ் பண்ண உட்றனும் என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் ஒரு பகுதியை இயக்கி இருந்தார். ஊர்ப் பெரிய மனிதராக இருக்கும் வீரசிம்மன், தன் மகள் (அஞ்சலி) தன் ஓட்டுனரைக் காதலிப்பதை அறிந்து தன்னுடைய கையாள் நரிக்குட்டி உதவியுடன் இருவரையும் கொலை செய்கிறார். மற்றொரு மகள் (அஞ்சலி), வேறு ஒரு நபரை காதலிப்பதை அறியும் வீர சிம்மன், பின் அவரையும் கொல்லப் பார்க்கிறார். பின்னர் அவரை காப்பற்றுவதற்காக அஞ்சலை தான் ஒரு தன்பால் ஈர்ப்புடையவள் என்று தனது தந்தையிடம் கூறுகிறார்.

தான் தன்பால் ஈர்ப்புடையவளாக மாறக் காரணம் சிறு வயது முதலே தான் ஆண்களுடன் பேசாதது தான் காரணம் என்று கூறுகிறார் அஞ்சலி. பின்னர் வீட்டில் இருந்து தப்பிக்கும் அஞ்சலி, தான் ஒரு தன்பால் ஈர்ப்புடையவள் இல்லை என்றும் உங்களிடம் இருந்து தப்பிக்கத்தான் அப்படி சொன்னேன் என்றும் கூறுவார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை எடுத்த விக்னேஷ் சிவனை விமர்சித்து பெண் இயக்குனரான லீனா மணிமேகலை ட்வீட் போட்டுள்ளார்.

அதில், பசங்களோட பேசக்கூடாதுன்னு கட்டுப்படுத்தி வளர்க்கறதால யாரும் லெஸ்பியன் ஆகிறதில்ல தமிழகத்தின் மாபெரும் இயக்குநர்களே! PaavaKadhaigal பரிதாபக்கதைகள். ஏம்பா நெட்ஃபிளிக்ஸ்,உனக்கு அமெரிக்காவில மட்டும் அவா துவர்னே,ஸ்பைக் லீன்னு கண்ணு தெரியும்.இந்தியான்னா குருடாயிடுமா?”  என்று பதிவிட்டுள்ளார். மேலும், ட்விட்டர் வாசி ஒருவர் படம் எப்படி என்று கேட்டதற்கு தலையில் அடித்துக்கொள்வது போல எமோஜி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

The post அமெரிக்கானா கண்ணு தெரியும், இந்தியானா குருடாகிடுமா ? விக்னேஷ் சிவனின் பாவக் கதையை கழுவி ஊற்றிய இயக்குனர். appeared first on Tamil Behind Talkies.

Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *