கடந்த மார்ச் மாதம் கொரோனா பிரச்சினையால் கடுமையான லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டது. அப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சாலையில் கஷ்டப்படுபவர்கள் என பலருக்கும் உதவி செய்தவர் ஹிந்தி நடிகர் சோனு சூட்.
இவர் தன் சொத்துக்கள் 10 கோடியை அடமானம் வைத்து பலருக்கு உதவிகளை வாரி வழங்கினார். இதற்காக சிறந்த மனித நேயர் விருதையும் இவர் பெற்றார்.
இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் தெலுங்கானாவில் இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர்.
தொடர்ந்து சோனு சூட்டின் சிலைக்கு தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினர்.
தெலுங்கானாவில் பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் #Telangana | #SonuSood | #SonuSoodTemple | #Temple pic.twitter.com/WOsybhrUjq
— Polimer News (@polimernews) December 21, 2020