Entertainment
Bigg Boss Leaked Promo Big Clash Between Aari And Anitha
Published
1 month agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 11வது வாரத்தை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். இதில் நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் 2 எவிகஷன் செய்து லவ் பெட்டின் உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனவே, இந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.இதில் எதிர்பார்த்தது போலவே நேற்றய நிகழ்ச்சியில் அர்ச்சனா தான் வெளியேற்றப்பட்டார். சம்யுக்தவிற்கு பின்னர் அர்ச்சனாவின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் திருப்தியான வெளியேற்றமான அமைந்து இருந்தது.
இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ‘மாட்னயா நீ ‘ என்ற டாஸ்க் ஒன்று கொடுக்கப்ட்டு இருந்தது. இதில், இதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு சீட்டை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் கேள்வியை கேட்க வேண்டும். இப்படி ஒரு நிலையில் ஷிவானி, ஆரியிடம் ‘இந்த வீட்டில் யார் Demotivated -அ இருகாங்கனு நீங்க feel பண்றீங்க என்று கேட்டிருந்தார்’ அதற்கு ஆரி, அனிதாவின் பெயரை சொல்லி, எங்க வீட்டில் என்ன நினைத்தகொள்வார்கள் என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு அனிதாவின் கணவர் பிரபா பெயரை சொல்லியுள்ளார்.
ஆனால், ஆரி இப்படி பேசி முடித்ததும் அனிதா, என்னுடைய அம்மா, அப்பா, குடுமபத்தினர் பற்றி பேசாதீர்கள் என்று சொல்கிறார். அதற்கு ஆரி, நான் பேசி முடித்த பிறகு தான் முடியும் நான் என்ன சொல்ல வந்தேன் என்று கூற, அதற்கு கடுப்பான அனிதா , என் புருஷன் பற்றியும், அம்மா அப்பா பற்றியும் பேசாதீர்கள் ஆரி, என்று கையை நீட்டி உதட்டை கடித்து எச்சரிக்கை செய்துள்ளார்.