Connect with us

Entertainment

என்ன வர வர சோம்க்கு இவ்ளோ கோவம் வருது – இன்னிக்கி ஒரு சம்பவம் இருக்கும் போல.

Published

on


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 11 வாரத்தை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, சுசித்ரா, ஜித்தன் ரமேஷ் ஆகிய 8 பேர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அர்ச்சனா வெளியேறி இருந்தார். கடந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம்பெற்றனர் . எனவே, இந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.இதில் எதிர்பார்த்தது போலவே அர்ச்சனா தான் வெளியேற்றப்பட்டார். சம்யுக்தவிற்கு பின்னர் அர்ச்சனாவின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் திருப்தியான வெளியேற்றமான அமைந்து இருந்தது. இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் டாஸ்க் மற்றும் வாரம் முழுதும் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர். இதில் அர்ச்சனா, ரம்யா, பாலாஜி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அர்ச்சனா வெற்றி பெற்று அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அர்ச்சனா வெளியேறியதால் தன்னுடைய கேப்டன் பதவியை பாலாஜிக்கு கொடுத்துவிட்டு சென்றார் அர்ச்சனா. இதனால் முதல் முறையாக வீட்டின் தலைவரானதோடு மட்டுமல்லாமல் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தார் பாலாஜி. இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு ‘Ball Catch’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இன்று வெளியான ப்ரோமோவில் டாஸ்கின் போது பாலாஜி மற்றும் சோம் சேகருக்கு ஏதோ வாக்கு வாதம் ஏற்பட்டு இருந்தது.

அதே போல தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சோம் மற்றும் ஆரி இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, அனிதா, கேப்ரில்லா, ஷிவானி, ஆஜித் ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாகவே லவ் பெட்டில் இருந்து ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா ஆகியோர் தான் போட்டியாளர்கள் வெளியேறி இருந்தார்கள் இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

The post என்ன வர வர சோம்க்கு இவ்ளோ கோவம் வருது – இன்னிக்கி ஒரு சம்பவம் இருக்கும் போல. appeared first on Tamil Behind Talkies.





Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *