தமிழில் செம்பருத்தியில் அறிமுகமான ரோஜா, தொடர்ந்து பல நல்ல படங்களில் தமிழ் மக்கள் மனங்களில் இடம்பிடித்தார். பூர்விக மொழியான தெலுங்கிலும் இவர் தொடர்ந்து நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
அரசியலில் விருப்பமுடைய ரோஜா பல்வேறு கட்சிகளில் பணியாற்றி விட்டு தற்போது ஆளும் ஜெகன் மோகன் கட்சியில் நகரி தொகுதி எம்.எல் ஏ ஆக உள்ளார்.
இவர் நேற்று தனது கட்சித்தலைவர் ஜெகன் மோகன் பிறந்த நாளை ஒட்டி ஆந்திராவிலுள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் தங்கி படித்து வந்த புஷ்பகுமாரி என்ற மாணவியை ரோஜா தத்தெடுத்துள்ளார்.
நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று புஷ்பகுமாரி தேர்ச்சி பெற்றுள்ளார். அவரது மேற்படிப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்பதாகவும் அவரை தத்தெடுப்பதாகவும் ரோஜா அறிவித்துள்ளார். ஆதரவற்றோர் இல்லத்துக்கு நேற்று சென்ற அவர், மாணவியை தத்தெடுப்பதற்கான நடைமுறைகளின்படி ஆவணங்களில் கையொப்பமிட்டார். பின்னர் மாணவியை தன்னுடன் அழைத்து சென்றார்.