Entertainment
மோசமான கமன்ட்டுகளை எல்லாம் தேடி தேடி டெலீட் செய்த அர்ச்சனாவின் மகள் – காரணம் இது தானாம்.
Published
4 weeks agoon
By
admin
இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம்பெற்றனர். எனவே, அந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.

இதில் எதிர்பார்த்தது போலவே கடந்த ஞாயிற்று கிழமை அர்ச்சனா தான் வெளியேற்றப்பட்டார். சம்யுக்தவிற்கு பின்னர் அர்ச்சனாவின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் திருப்தியான வெளியேற்றமான அமைந்து இருந்தது. அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
மற்ற போட்டியாளர்களை போல் அல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, தனது குடும்பத்தை பார்க்கப் போகிறோம் என்று தான் அர்ச்சனா இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவுடன் அவரது மகள் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுள்ளார். அதில் ‘என்னோட பாஸி குமாரு வந்துட்டாரு, கடவுள் இருக்கான் குமாரு’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு கீழே அர்ச்சனாவை பலர் திட்டி தீர்த்தும் இருந்தனர்.

மேலும், பலர் அர்ச்சனாவின் வெளியேற்றத்தை கேலி செய்தும் இருந்தனர். ஆனால், அதற்கு எல்லாம் சற்றும் கலங்காமல் அணைத்து கமென்டிற்கு பதில் அளித்தார் அர்ச்சனாவின் மகள். மேலும், தனது அம்மா குறித்து வரும் மோசமான கமன்ட்களை எல்லாம் தேடி தேடி டெலீட் செய்துள்ளார். இதற்கான காரணத்தை கூறியுள்ள அவர், இத்தனை நாள் கழித்து வந்திருக்காங்க, இது போல கமெண்டை எல்லாம் அவர் பார்த்து கவலைக்குள்ளாக விரும்பவில்லை. அதனால் தான் அதை எல்லாம் டெலீட் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
The post மோசமான கமன்ட்டுகளை எல்லாம் தேடி தேடி டெலீட் செய்த அர்ச்சனாவின் மகள் – காரணம் இது தானாம். appeared first on Tamil Behind Talkies.