Entertainment
Bigg Boss Kamal Questioned About Anitha Sampath Eviction
Published
3 weeks agoon
By
admin
தமிழகத்தில் வருகின்ற 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், ரஜினியின் புதிய கட்சி என தேர்தல் களம் காணவுள்ளனர். சமீபத்தில் தேர்தலுக்கான கட்சி சின்னங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நடிகர் கமலின் மக்கள் நீதி மையத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டவில்லை. ஆனால், புதுச்சேரியில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அட பாவிகளா 🤓🤓🤓🤓
— selvi seema (@selvisss91) December 21, 2020
இப்படி ஒரு நிலையில் நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான நடிகர் கமலஹாசன் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த 3 தினங்களாக தொடர்ந்து வருகிறார். இதற்காக மதுரை, தேனி, விருதுநகர் போன்ற பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் நேற்று திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், செல்லும் இடமெல்லாம் தனக்கு மக்களின் ஆதரவு இருப்பாதகவும் கூறி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகர் கமல், பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது. மக்கள் கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் ‘அனிதா சம்பத் போவாளா எப்படி’ என்று கேட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர். ஏற்கனவே, நடிகர் கமல் இந்த வயதில் பிக் பாஸை தொகுத்து வழங்கி இருக்கி வருகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேலி செய்து இருந்தார்.
Aandavar:This Week Poiruvanga pa😂😂😂
— Arun Kumar (@ArunKum17728298) December 21, 2020
அதற்கு தனது சமூக வலைதளத்தில் பதில் அளித்திருந்த கமல் ‘முதல்வரும் பிக் பாஸ் பார்க்கிறார் என்பதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டு இருந்தார். ஆனால், அரசியல் பயணம் மேற்கொண்ட கமலிடம் இப்படி பிக் பாஸ் குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளது பேசும் கேலிக்கு உள்ளாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க அந்த நபர் கூறியதற்கு ஏற்றார் போலத்தான் இந்த வாரம் நாமினேஷனில் அனிதா சம்பத்தும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.