Entertainment
Rajinikanth Annaatthe 8 Crew Member Tested Positive For Corona Virus
Published
4 weeks agoon
By
admin
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யபட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

அதே போல தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்த்னர். இது ஒரு புறம் இருக்க போதாத குறைக்கு புதிய வைரஸ் ஒன்றும் பரவி வருகிறது. மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக பல மாதங்களாக சினிமா படப்பிடிப்புகள் கூட முடங்கி இருந்தது. சமீபத்தில் தான் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகள் துவங்கியது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் துவங்கியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்காக ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் தனி விமானத்தில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றனர். இப்படி ஒரு நிலையில் இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடிகர் ரஜினிகாந்துக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.