Connect with us

Entertainment

Actress Samantha Shares Her Dress She Couldnt Wear This Year

Published

on


தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தாவுக்கு சில வருடங்களாகவே தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் நடிப்பில் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள். தமிழை விட இவருக்கு தெலுங்கில் தான் தற்போது ரசிகர்கள் அதிகம். அதற்கு முக்கிய காரணமே இவர் நாகர்ஜுனா வீட்டின் மருமகள் ஆன பின்னர் தான். நாகர்ஜுனா மூலம் தான் இவருக்கு சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்காலிகமாக தொகுப்பாளராக வாய்ப்பும் கிடைத்தது.

திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையிலும் குழந்தை பெறாமல் இருந்து வரும் சமந்தா இன்னமும் தனது உடல் சார்ந்த விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். அதே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா அடிக்கடி புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம். இப்படி ஒரு நிலையில் இந்த ஆண்டு தான் அணியநினைத்த ஆடைகள் அணிய முடியாமல் போனது என்று நடிகை சமந்தா படு கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். மேலும் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-



Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *