நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றிருந்தார். இந்நிலையில் படப்பிடிப்ப்ய் டெக்னீஷியன்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ரஜினிகாந்துக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தது.
இந்நிலையில் தொடர்ந்து ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார்.
இதுபற்றி வெளியாகியுள்ள அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதாகவும், ரஜினிகாந்த்தை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ரத்த அழுத்தம் சீராகும் வரை அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் உடல்நலம் தேறி வருவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.