தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பவன்கல்யாண். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியாவார். இவர் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். திரைப்படங்களிலும் அரசியலிலும் தொடர்ந்து இருக்கும் பவன் கல்யாண். ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார் என தெரிந்த உடன் அதற்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் ரஜினிகாந்த் தைரியமானவர். ஆன்மிகம் உள்ளவர் கடவுளின் ஆசிர்வாதங்களை பெற்று அவர் குணமடைவார், அவர் வணங்கும் மஹா அவதார் பாபாஜியின் அருளை பெற்று அவர் முழுமையான ஆரோக்கியத்துடன் வரவேண்டும் என பவன் கல்யாண் கூறியுள்ளார்.
இதையும் பாருங்க
Read More