Entertainment
Rashmika Mandanna’s Ex Boyfriend Rakshit Shetty Reply To Her
Published
4 weeks agoon
By
admin
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முன்னாள் காதலர் ராஷ்மிகா ட்வீட்டிற்கு அளித்துள்ள பதில் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “இன்கேம் இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதோடு இந்த படத்தில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி உடன் இணைந்து நடித்தார்.

மேலும், தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர். தற்போது தெலுங்கு, கன்னடம் இரண்டு படம் என்று பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவிலும் கார்த்தியுடன் ‘சுல்தான் ‘ படத்தின் மூலம் கால் பதிக்க உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமான முதல் படமான ‘கிரிக் பார்ட்டி ‘ படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரு படத்தின் ஷூட்டிங் சமயத்தில் தான் காதலில் விழுந்தார்கள். இவர்கள் இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள்.
ஆனால், இவர்கள் திருமணமத்திற்கு முன்பாகவே பிரிந்துவிட்டனர். இப்படி ஒரு நிலையில் நடிகை ராஷ்மிகா அறிமுகமான ‘கிரிக் பார்ட்டி’ படத்தில் இடம்பெற்ற ‘Belageddu’ என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளதை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அந்த ட்வீட்டில் தனது முன்னாள் காதலரான ரக்ஷித் ஷெட்டியின் ட்விட்டர் கணக்கையும் டேக் செய்து இருந்தார் ராஷ்மிகா.
A true Gentleman 💯, nonetheless having a bad past with some people he is wishing good for them.
— Vinayak Kori (@VinayakKori20) December 25, 2020
இதற்கு கமன்ட் செய்து இருந்த ரக்ஷித் ஷெட்டி ‘மென்மேலும் வளரு பெண்ணே, உன் கனவுகள் அனைத்தும் நிறைவடையட்டும் ‘ என்று கமன்ட் செய்து இருந்தார். ரக்ஷித் ஷெட்டியின் இந்த கமென்டை பார்த்த ரசிகர்கள் பலரும் ரக்ஷித் ஷெட்டியின் இந்த குணத்தை பாராட்டி வருகின்றனர். அதில் ஒருவர் உங்களின் வலி என்னவென்று புரிகிறது என்று பதிவிட்டுள்ளார். ஆனால் , ரக்ஷித் ஷெட்டி யின் இந்த கமென்டிற்கு ராஷ்மிகா ஒரு நன்றியை கூட தெரிவிக்காமல் அசிங்கப் படுத்தி இருக்கிறார் என்று ரசிகர்கள் கமன்ட் போட்டு வருகின்றனர்.
When loved girl breakup with u… But u still loving her n encouraging her to reach morw heights… This is rakshith shetty for u.. 😍#SanviKarna
— Vikranth rona Tweet (@Raj54580956) December 25, 2020
ஏற்கனவே, திருமணம் நின்றுபோனதற்கான காரணத்தை கூறிய ராஷ்மிகா, கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ரக்ஷித் ஷெட்டியுடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. எனக்கு வரப்போகிற கணவர் சினிமா துறையில் இல்லாதவராக இருக்க வேண்டும் என்று தான் நான் ஆசைப்பட்டேன். ஆனால், ரக்ஷித் சினிமா துறையை சார்ந்தவராக இருந்தாலும் வித்தியாசமாக இருந்தார். அவர் மீது எனக்கு இருந்த காதல் காரணமாக அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோன்.
நாங்கள் இருவரும் தொழில் ரீதியாக பெயர் வாங்க வேண்டும் என்றால் திருமணத்துக்கு 2 ஆண்டுகள் காத்து இருக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் 2 ஆண்டுகள் முடிந்தபிறகும் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகம் வந்ததால் திருமணத்திற்க்கு என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. ஒருவேளை நான் திருமணம் செய்தால் தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்துவதுபோல் ஆகி விடும். எனவே அவர்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது என்று திருமணத்தையே ரத்து செய்து விட்டேன் என்று கூறியிருந்தார் ராஷ்மிகா மந்தனா.