Entertainment
Ajith And Jaishankar Son Vijay Shankar Sweet Relationship
Published
3 weeks agoon
By
admin
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகை கலக்கி கொண்டிருக்கும் அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள் தன்னுடைய படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் டாக்டர் விஜய் சங்கர் உடன் பொழுதுபோக்கு செய்வாராம். அது தான் அஜித்தின் வழக்கம். டாக்டர் விஜய் சங்கர் என்பவர் தமிழ் சினிமா துறை திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி, காலங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்த ஜெய்சங்கர் அவர்களின் மகன் ஆவார். ஜெய்சங்கர் அவர்கள் உயிரோடு இருக்கும் காலங்களில் இலவசமாக பலமுறை கண் சிகிச்சை முகாம் நடத்தி இருக்கிறார். மேலும், தன் மகன் அழகான தோற்றம் உடையவராகவும், அவருக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்தும் தன் மகனை சினிமாவில் நடிக்க அவர் அனுமதிக்கவில்லை.

ஏனென்றால், இந்த சினிமா தொழில் என்னோடே போகட்டும். நீ பிறருக்கு கண் ஒளி கொடுத்து அவர்கள் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.மேலும், அதற்காக தன் மகனை கண் மருத்துவத்துறைக்கு போ! என்று கூறி அதற்கேற்றவாறு அவரை படிக்கவும் வைத்தார். தற்போது உலகம் முழுவதும் சுற்றிவரும் பிரபலமான கண் மருத்துவர் ஆக விஜய் சங்கர் திகழ்கிறார்.அது மட்டும் இல்லைங்க மேலும் விஜய் சங்கர் அவர்கள் நம்ம தல அஜித் அவர்களின் நெருக்கமான நண்பர் ஆவார்.மேலும், நம்ம தல அஜித் அவர்கள் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் விஜய் சங்கர் உடன் தான் அந்தப் பொழுதை போக்குவாராம். அப்படி ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது நம்ம தல அஜித் அவர்கள் விஜய் சங்கரிடம் கூறியது, உங்களிடம் கண் சிகிச்சைக்காக பல நோயாளிகள் வருவார்கள்.
அதில் வரும் நோயாளிகள் ஆப்ரேஷன் செய்ய பணவசதி இல்லாமல் கஷ்டப்பட்டால் அவங்களை திருப்பி அனுப்பாதீர்கள். அந்த நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான மொத்த செலவையும் நானே செய்கிறேன். மேலும், அந்த நோயாளிகளின் சிகிச்சைக்கு செலவான பணத்தின் தொகையை எனக்கு அனுப்பிவிடுங்கள். நான் உடனே காசோலையை தருகிறேன் என்று கூறினார். மேலும், இதுகுறித்து என்கிட்ட கேட்கவே வேணாம். நீங்களே அந்த மாதிரி நோயாளிகள் கஷ்டப்பட்டு இருந்தால், நீங்கள் அவர்களுக்கு சிகிச்சை அளியுங்கள். நான் பணத்தை தருகிறேன் என்று உறுதியாகக் கூறினார் நம்ம தல.

இது மட்டும் இல்ல இன்னொரு முக்கியமான விஷயம். என்னன்னா நான் தான் இந்த மாதிரி கஷ்டப்படுபவர்களுக்கு பண உதவி செய்கிறேன் என்பதை யாரிடமும் சொல்லாதிங்க. இது ரகசியமாகவே இருக்கட்டும் என்றும் டாக்டர் விஜய் சங்கரிடம் அன்பு வேண்டுகோள் ஆகவும், கட்டளையாகும் நடிகர் அஜித் கூறினார். ஆனால் எப்படியோ இந்த விஷயம் லீக் அவுட் ஆயிடுச்சு. இது மட்டும் இல்லைங்க நம்ம தளபதி விஜய் அவர்களின் பிகில் படத்தின் படப்பிடிப்பில் 150 நாட்களுக்கு மேல் வேலை செய்த அந்த பிகில் யூனிட் ஆட்களுக்கு பிகில் பெயர் வைத்த மோதிரத்தை அனைவருக்கும் பரிசளித்தார்.

இவரைத் தொடர்ந்து தற்போது காப்பான் படத்தில் நடிகர் சூர்யா அவர்களும் தன்னுடைய பட யூனிட்டில் வேலை செய்த ஒவ்வொரு டெக்னீசியன்களுக்கும் தலா ஒரு பவுன் தங்க காசு பரிசாக கொடுத்தாராம். நான் இந்தப் பவுன் தங்க காசு கொடுத்த விசயத்தை யார்கிட்டயும் சொல்லாதீர்கள் என்று கூறினாராம். அப்படியும் வெளியில் வந்துவிட்டது. இவர்கள் செய்வதெல்லாம் பார்த்தால் படையப்பா படத்தில் ரஜினி பாடல் தான் நியாபகம் வருது. “என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா!” என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.