Entertainment
Bigg Boss Anitha Sampath Eviction Conformed Check Her Tweet
Published
3 weeks agoon
By
admin
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்கள் பற்றிய நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 83 நாட்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் இன்னும் ஒன்பது பேர் அப்படியே இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது.
Yeppa… Oru vazhiya… Evict ayitta… Inime nimmadhiya big boss pakkalam… Overacting
5rs nadikka sonna…5lk nadikkara..
Unakku vandha ratham.inorutharukku vandha thakali chutney..
Prabha… Indha varsha amaidhikkana noble prize unakku thaan…— priyanka iyyer (@priyankaiyaer) December 26, 2020
அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தார்கள். எனவே, இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இந்த வாரம் அனிதா சம்பத் அல்லது ஆஜித் ஆகிய இருவரில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பல்வேறு தனியார் வலைதள பக்கங்களில் நடைபெற்றுவரும் வாக்கெடுப்பில் அனிதா சம்பத்திற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தது போல அனிதா தான் இந்த வாரம் வெளியேறி இருப்பதாக நம்பகரமான தகவல் வெளியாகி இருந்தது. அதே போல இத்தனை வாரங்களைக் கடந்த ஆண்டும் இந்த சீசனில் இதுவரை ரகசிய அறை பயன்படுத்தப்படாமல் தான் இருக்கிறது.
தயவு செய்து நீ சிரிதைதை பார் அப்போ புரியும் நாங்க பட்ட கஷ்டம். என்ன கருமம் இது…
— ☣️☣️☣️ Prakash☣️☣️☣️ (@prakashg160) December 26, 2020
எனவே, இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் ரகசிய அறையில் வைக்கப்படுவாரா ? இல்லை இந்த சீசனில் ரகசிய அதை பயன்படுத்தாமலே விட்டுவிடுவார்களா என்பதும் தெரியாமல் இருந்தது. இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத்தின் ட்விட்டர் பக்கத்தில் ‘அனைத்திற்கும் நன்றி ‘ இன்று பதிவிட்டு தன்னுடைய வெளியேற்றத்தை உறுதி செய்து இருக்கிறார்.