Entertainment
Bigg Boss Special Guest Jayam Ravi For His Bhoomi Movie Promotion
Published
4 weeks agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 11 நாட்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் இன்னும் ஒன்பது பேர் அப்படியே இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.
சமீபத்தில் இந்த வாரத்தில் சிறப்பாக செயல்பட்ட போட்டிகளாக ஆரி, ரியோ, சோம் ஆகிய 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள. இந்த மூன்று பேரும் இந்த வார கேப்டன் பதவிக்கான போட்டியில் பங்கேற்று இருந்தார்கள்.நேற்றைய நிகழ்ச்சியில் நடைபெற்ற கேப்டன் பதவிக்காண டாஸ்கில் வெற்றிபெற்று கேப்டனாக வந்துள்ளார் ஆரி. எனவே, அடுத்த வாரம் நாமினேஷனலிருந்து ஆரி safe ஆகி இருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தார்கள். எனவே, இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இந்த வாரம் அனிதா சம்பத் அல்லது ஆஜித் ஆகிய இருவரில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பல்வேறு தனியார் வலைதள பக்கங்களில் நடைபெற்றுவரும் வாக்கெடுப்பில் அனிதா சம்பத்திற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அனிதா சம்பத் தான் இந்த வாரம் வெளியேறி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இன்று பிக் பாஸ் மேடைக்கு ஜெயம் ரவி வந்துள்ளார். அதற்கு காரணம் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பூமி’ திரைப்படம் ஹாட் ஸ்டாரின் வெளியாக இருக்கிறது. அதன் ப்ரோமோஷனுக்காக தான் ஜெயம் ரவி வந்துள்ளார்.